சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சவூதி ஆரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபின் விமான நிலைய சுங்கத் துறையினர் விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் ஒரு இருக்கையின் அடியில் ஒரு பை ஒன்று இருந்ததை பற்றி சுங்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் தந்தனர். உடனே சுங்கத் துறையினர் அந்த பையை பிரித்து பார்த்தனர்.