இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை இன்று (டிச. 20) சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்த ஒரு உதவியும் இதுவரை செய்யவும் இல்லை. ஆனால் தற்பொழுது பொங்கல் பரிசாக ரூ. 2500 ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு என்பது யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழிக்கு ஏற்ப தேர்தல் வருகின்றபொழுது இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார் .
மக்களுக்கு அரசாங்க பணத்தை மக்களின் வரி பணத்தை அவர்களுக்கு கொடுத்து வாக்குகளை தனக்கு வழங்க வேண்டும் என்ற அறிவிப்பாகவே இது உள்ளது. அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற முதலமைச்சர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” என்றார்.