சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவது பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை புதிய உச்சமாக ஒரேநாளில் 451 பேருக்கு நேற்று (ஆக. 26) உறுதியானது.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகையில், "சேலம் மாநகராட்சியில் 291, எடப்பாடி 6, கொங்கணாபுரம் 3, மகுடஞ்சாவடி 7, மேச்சேரி 1, மேட்டூர் 5, ஓமலூர் 4, சங்ககிரி 14, வாழப்பாடி 4, வீரபாண்டி 16, ஆத்தூர் 48, அயோத்தியாப்பட்டணம் 8, கெங்கவல்லி 8, பனமரத்துப்பட்டி 1, பெத்தநாயக்கந்பாளையம் 3, தலைவாசல் 3, வாழவந்தி 6 என மாவட்டத்தில் 447 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களான நாமக்கல் 3, விழுப்புரம் 1 என 4 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒரு மூதாட்டி உள்பட 8 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 966 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரத்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.