சேலம்:கரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடைபயணம்
குறிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசும், தன்னார்வ அமைப்பினரும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல்துறை சார்பில் சூரமங்கலம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் நஞ்முல் ஹோதா தலைமையில் சேலம் ஜங்சன் பகுதியிலிருந்து சூரமங்கலம், சோனா கல்லூரி ஏவிஆர் ரவுண்டானா , 5 ரோடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று முக் கவசம் அணியாத நபர்களுக்கு முகக் கவசம் வழங்கினார்.