தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

சேலம்: கரோனா தொற்றை தடுக்கும் விதமாக அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சேலத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி
சேலத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி

By

Published : Mar 28, 2020, 7:59 AM IST

நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை வைரஸ் தொற்றிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் துறை, தீயணைப்புத் துறை, வங்கிகள், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், அஞ்சல் துறை, வட்டாட்சியர் அலுவலகம், பட்டு வளர்ப்புத் துறை, மருத்துவமனை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலகக் கட்டடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சேலத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி

மேலும் நான்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள், உழவர் சந்தை பகுதிகள், ஆகியவற்றிலும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதென சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’

ABOUT THE AUTHOR

...view details