இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்டு, ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ், ரூபாய் ஐந்து லட்சம் வரையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையே போதுமானதாகும். தனியாக பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் எவ்வித அடையாள அட்டையும் அரசால் வழங்கப்படுவது இல்லை.
போலி மருத்துவ காப்பீட்டு அட்டை - ஆட்சியர் எச்சரிக்கை! - பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா
சேலம்: அங்கீகாரம் இல்லாத மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை அச்சிட்டு வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட சிலர் முறைகேடாக பொதுமக்களிடமிருந்து ரூ.20 முதல் ரூ.150 வரை பெற்றுக்கொண்டு, அச்சிடப்பட்ட போலியான பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்ட அட்டை வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம். இது போன்று பொதுமக்களிடமிருந்து தவறான முறையில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகரிக்கப்படாத அச்சிடப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ’1800 425 3993’ என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் " என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பூர் தனியார் சீட்டு கம்பெனி முற்றுகை: வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக புகார்