தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடையை மீறி கொடிக் கம்பம் நட முயன்ற விசிகவினர் காவலர்களுடன் மோதல் - கொடிக் கம்பம் நட முயன்ற விசிக

சேலம் அருகே தடையை மீறி கொடிக் கம்பம் நட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கொடிக் கம்பம் நட முயன்ற விசிக
கொடிக் கம்பம் நட முயன்ற விசிக

By

Published : Sep 24, 2021, 10:40 AM IST

சேலம் மாவட்டம்கே. மோரூர் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக் கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், கொடிக்கம்பம் நடுவதற்கு காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் அனுமதி கொடுக்க மறுத்தனர்.

மேலும், ஏற்கனவே அங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி கொடிக்கம்பங்கள் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற வகையில் இனி புதிதாகக் கொடிக் கம்பங்கள் நடக்கூடாது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, போரூர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

காவல் துறையினரிடம் வாக்குவாதம்

காவல் துறையினர், வருவாய்த் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் அங்கு நடைபெறவிருந்து நிகழ்ச்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரத்துசெய்தனர். இந்நிலையில், நேற்று (செப். 23) காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் கே. மோரூர் பேருந்து நிறுத்தம் அருகே தடையை மீறி கொடிக் கம்பத்தை நட முற்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி காவல் துறையினர், கொடிக் கம்பம் நட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைத் தடுத்தனர். அப்போது, காவல் துறைக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல் துறை தடியடி

ஒரு கட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், காவல் துறையினர் மீது கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி போர்க்களம்போல மாறியது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

கொடிக் கம்பம் நட முயன்ற விசிக

இதனையறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்திவருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீ வேணா சண்டைக்கு வா... போதையில் ஆடையின்றி தகராறில் ஈடுபட்ட காவலர்

ABOUT THE AUTHOR

...view details