தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கேக்' தயாரிக்கும் பணி கோலாகலம்! - salem

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு "ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கேக்" தயாரிக்கும் பணி சேலத்தில் தொடங்கியது.

Christmas cake
Christmas cake

By

Published : Nov 10, 2020, 4:06 PM IST

Updated : Nov 10, 2020, 8:37 PM IST

சேலம் குரங்குசாவடியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று பொது முடக்கத்தால், சற்று தாமதமாக பிரபல நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 10) நடைபெற்றது.

இதற்காக முந்திரி பழங்கள், உலர் திராட்சை, செர்ரி பழம் உள்ளிட்ட 60 வகையான பழ வகைகள், உயர் ரக மதுபானங்கள் ஆகியவற்றை கலந்து கேக் மிக்சிங் நடைபெற்றது.

christmas-cake

இதன் மூலம் தயாரிக்கப்படும் கேக், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வாடிக்கையாளர்களின் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது என்று நட்சத்திர விடுதியின் முதன்மைச் செயல் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Last Updated : Nov 10, 2020, 8:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details