சேலம் மாநகராட்சி சூரமங்கலம் அருகேயுள்ள சின்ன மோட்டூர் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் இப்பணி மிகத்தாமதமாக நடப்பதால் மாற்றுப்பாதை இல்லமால் மக்கள் தவித்து வருகின்றனர்.
அப்பகுதி வழியாகச் செல்லும் ஓடை நீர், இந்த பணியினால் ஏரியுடன் கலக்காமல் கழிவுநீருடன் கலப்பதாகவும், அவ்வப்போது குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அவ்வூர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் இது குறித்து அவ்வூர் மக்கள் கூறுகையில், " இந்த பாலம் கட்டும் பணியினால் மழை காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் இந்த பாதை வழியே நடப்பதற்கே அஞ்சுகின்றனர். பாலம் கட்டும் பணியை வேகமாக முடிப்பதோடு அல்லாமல், கழிவு நீர் தனியாகவும், ஓடை நீர் ஏரியுடன் இணைய தனியாகவும் கால்வாய் அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
ரயில் பாதை அமைக்கும் பணி யால் பொதுமக்கள் அவதி இது குறித்து உரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு உதவ வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: சேதமடைந்த குடிநீர் குழாய் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!