சேலம் செயில் நிறுவனத்தின் சார்பில் கடுங்குளிரைத் தாங்கி நிற்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட தகடுகளை ஏந்தி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் பயணிக்க இருந்தது. சேலம் செயில் நிறுவனத்தில், இஸ்ரோவிற்கு தேவையான ரஷ்ய தரமான ஐசிஎஸ்எஸ்/1218/321 வகை ஆஸ்டெனிக் நிலைப்படுத்தப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை, கடுங்குளிர் (கிரையோஜெனிக்) ஏவுகணை எந்திரம் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-2 விண்கலத்துக்கு சேலத்தில் இருந்து உதிரி பாகங்கள்..!
சேலம்: சந்திராயன்-2 விண்கலத்தின் பாகங்கள், சேலத்திலுள்ள அரசின் செயில்(SAIL) நிறுவனத்தின் தகடுகளால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோவின் திரவ உந்துதல் அமைப்பு மையம் (எல்.பி.எஸ்.சி.) விஞ்ஞானிகள், செயிலின் சேலம் உருக்காலை குழுவினர் இணைந்து சோதனை முறையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுருள்களைத் தயாரித்தனர். வெப்ப உருட்டப்பட்ட இந்த 4 மி.மி. தடிமன் சுருள், பிறகு இஸ்ரோவின் தேவைக்கேற்ப 2.3 மி.மி. தடிமனுக்குக் குளிரூட்டப்பட்டுள்ளது. சந்திரயான் தவிர மற்ற பயணங்களுக்கும் இந்த 2.3 மி.மி. தடிமன் தகடானது, கிரையோஜெனிக் எந்திரத்தின் சிஇ20-க்கும் உபயோகப்படுத்தப்பட்டது.
இதுதவிர மேலும் ஐந்து எஞ்சின்களை சேலம் உருக்காலை தயாரித்த 321 தரத்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்பட்டன என, சேலம் உருக்காலை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.