சேலம்: சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்கத்தின் 80 ஆண்டுகள் நிறைவு விழாவிற்குப்பின் பேசிய நூல் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராசி சரவணன் 'பருத்தி கொள்முதலை முழுமையாக அரசு செயல்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் நிலையங்களை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டமும் 80 ஆண்டுகள் நிறைவு விழாவும் சேலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து திரளான நூல் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குத் தலைவர் ராசி சரவணன் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் சரவணன் கூறுகையில், “பருத்தி கொள்முதலை முழுவதுமாக தமிழ்நாடு அரசு ஏற்று நடத்திட வேண்டும். கொள்முதல் செய்யும் பஞ்சை நூற்பாலைகளுக்கு மட்டும் விற்க அரசு முன்வர வேண்டும். மேலும் எம்.என்.சி கம்பெனிகளுக்கு பருத்தி மற்றும் பஞ்சை விற்கும்பொழுது அவர்கள் வாங்கும் பருத்தியை வெளிநாட்டுகளுக்கு மட்டும் விற்க சட்டம் இயற்ற வேண்டும்.