கிருஷ்ணகிரியில் பேரறிவாளன் சகோதரி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கௌதமன் கலந்து கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கௌதமன், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும். மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது, ரகசிய தேர்தலுக்கான அவசர சட்டத்தை யாரை கேட்டு எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை.
உள்ளாட்சி தேர்தல் மற்றும் மேயர் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. அதனால் மறைமுக தேர்தல் மூலம் தில்லு முல்லு செய்து மேயரை குதிரை பேரம் பேசி, மறைமுகமாக பாஜக கட்சியினர் எச்.ராஜா போன்றவர்களை மேயர் மற்றும் துணை மேயர்களாக அமர்த்த பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு அதிமுக துணை போகிறது.
அவசர சட்டத்தை ஒரு மணி நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஆனால் விரைவில் தண்டனை காலம் முடிந்து வெளிவர இருக்கையில் பல்லாண்டுகளாக நடையாக நடந்து பேரறிவாளன் அம்மா அவர்கள் கால் தேய்ந்து விட்டது.
ஆளுநர் அவசர சட்டம் தொடர்பாக இவ்வளவு சீக்கிரம் முடிவு எடுத்தது போல் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக முடிவு எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
முன்னதாக பேரறிவாளன் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள், நடிகர் பொன்வண்ணன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இதையும் படிங்க: “சாகர்மாலா திட்டம் மீனவர்களை சாகடித்து மாலை போடும் திட்டம்”