சேலம் மாவட்ட பாஜகவினர் இன்று(நவ.03) ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அதையடுத்து அவர்கள், பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க வேண்டும் எனக் கோரி, அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும்! - அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
salem collector office
அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற அவர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்தனர்.
இதையும் படிங்க:'பிரதமர் மோடியின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும்'