தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘6 மணி நேரமாவது கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்’ - முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை - saloon workers petition

சேலம்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சலூன் கடைகளை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

saloon workers petition
saloon workers petition

By

Published : Apr 29, 2021, 6:12 PM IST

கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் முழு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பியூட்டி பார்லர், சலூன் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். கடந்த ஒரு வாரமாக சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது கடைகளை திறந்து செயல்படுத்த அனுமதிக்குமாறும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராஜா கூறுகையில், "கடந்த ஆண்டு பாதிப்பில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. அதற்குள் அடுத்த பொது முடக்கம் எங்கள் பொருளாதாரத்தை சீர்குலைத்துவருகிறது. எனவே ஆறு மணி நேரம் சலூன் கடைகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் முன்வந்து அனுமதி வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details