வங்கி ஊழியர்களுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சம்மேளத்தினர் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறத்தப் போராட்டம்
சேலம்: வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் சுமார் 300 வங்கிக் கிளைகளில் பணப் பரிவர்த்தனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் சேலத்தில் 300 வங்கிக் கிளைகள் மூடப்பட்டதால் ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவாமிநாதன் (வங்கி ஊழியர்கள் சம்மேளம்) பேசுகையில், ‘20 விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: ’இந்தியாவைக் காப்பாற்றுங்கள்’ - மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்