தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்! பெண்களின் விழிப்புணர்வு பேரணி! - சேலத்தில் செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணி

சேலம்: குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம் வரும் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் நான்காம் தேதிவரை நடைபெற உள்ள நிலையில் அதற்கான விழப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

Awareness rally for Modern contraception camp for men in salem

By

Published : Nov 25, 2019, 1:43 PM IST


சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம் வரும் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் .

சேலத்தில் செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணி

இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் , கோட்டை மைதானம் வழியாக அரசு மருத்துவமனை வரை நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சேலம் அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சையின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details