சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆத்தூர், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்துவருகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவரும் ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் குழந்தைகளை உள்நோயாளியாக அனுமதிக்கும்போது போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கவைத்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள் .
படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கும் குழந்தைகள் புறநோயாளியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டாயிரம் பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆனால் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால் பல மணி நேரம் நின்று, காத்திருந்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. குழந்தைகள் பிரிவுக்கும் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாத நிலை எற்பட்டுள்ளது.
ஆகவே, ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக இருந்தும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு போதிய மருத்துவர்களை நியமிக்கவும் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் ஆத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "How Dare You?" என்ற கேள்வியால் உலகை திரும்பி பார்க்க வைத்த கிரேட்டா தன்பெர்க்