தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2019, 3:29 PM IST

ETV Bharat / city

அனுமதியின்றி போராட்டம் நடத்திய பெண்கள் கைது!

சேலம்: பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து காவல்துறையினர் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் கைது
சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் கைது

சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் கடந்த 23-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை காவல்துறையின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காவல்துறையின் அனுமதியின்றி பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து தமிழ்நாடு பெண்கள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் கைது

அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பத்து பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

பயணிகளின் புகார்களுக்கு உதவ முன்வரும் 'செக்வே' தானியங்கி வாகனம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details