சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தற்போது இரண்டாவது சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மூன்றாவது, நான்காவது சுற்றுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சுற்றுகளில் அதிமுக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
11-க்கு 9:
சேலம் தெற்கு, வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி. ஏற்காடு, ஓமலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மேலும் அதிமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் சேலம் மேற்கு தொகுதியிலும் மேட்டூர் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர் .