தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கரோனா தொற்று பரிசோதனை மையம் திறப்பு

சேலம்: மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 379 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதில் 6 ஆயிரத்து 222 நபர்கள் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரிசோதனை மையம்
கரோனா தொற்று பரிசோதனை மையம்

By

Published : Aug 29, 2020, 3:01 PM IST

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறிவதற்கான கூடுதல் சளி தடவல் பரிசோதனை ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் ராமன் திறந்துவைத்தார்.

புதியதாக திறக்கப்பட்டுள்ள பரிசோதனை ஆய்வகம் குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு பாதுகாப்பு, விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கின்றதா என்பதை கண்டறிவதற்கான சளி தடவல் பரிசோதனை முகாம்கள் 56 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்களின் மூலம் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் ஏற்கனவே நாள் ஒன்றிற்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சளி தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு, நாள்தோறும் 4,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளி தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்நிலையில் சளி தடவல் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அன்றைய தினமே தெரிவிக்கும் விதமாக, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று கருவிகளுடன் செயல்பட்டுவந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை ஆய்வகம் விரிவுபடுத்தப்பட்டு, மேலும் கூடுதலாக இரண்டு கருவிகளுடன் கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறிவதற்கான சளி தடவல் பரிசோதனை ஆய்வகம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 200 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான சளி தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 379 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு, சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு 6 ஆயிரத்து 222 நபர்கள் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 3 ஆயிரத்து 31 நபர்கள் இந்நோய் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதர பல்வேறு நோய் தொற்றுகள் இருந்ததன் காரணமாக 126 நபர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்" என அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். பாலாஜிநாதன், பொதுப்பணித்துறை (மருத்துவப் பணிகள்) செயற்பொறியாளர் சண்முகம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.நிர்மல்சன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். தனபால் உள்பட மருத்துவர்கள், செவிலியர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details