தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் குவிந்த விஜய் ரசிகர்கள் - etvbharat

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் ரசிகர்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி
விஜய் ரசிகர்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Jul 29, 2021, 8:58 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலத்திலுள்ள நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 28) நடைபெற்றது.

நிவாரண உதவிகள்

இதில் சேலம் வடக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் இரா. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் ஆகியோர் கலந்துகொண்டு பயானிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

இந்நிலையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சேலம் மாவட்ட விஜய் ரசிகர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

கட்டுப்பாடின்றி

அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அனைவரும் ஆட்சியர் கண்முன்னே நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர்.


ஆட்சியர் அலுவலகத்திற்கு சாதாரண பொதுமக்கள் மனுக்களை வழங்க உள்ளே நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் காவல் துறையினர், 1000-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களை எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அனுமதித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு!

ABOUT THE AUTHOR

...view details