ஒடிசாவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா (சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை) அருகே திடீரென விபத்துக்குள்ளானது.
ஆந்திரா அருகே ஆம்னி பேருந்து விபத்து- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் உயிரிழப்பு! - ஆம்னி பேருந்து விபத்து
ஆந்திரா: கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அருகே தனியார் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.
கன்னவரத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்றபோது, கீசரப்பள்ளி என்னும் இடத்தில் பேருந்தின் டயர் திடீரென வெடித்து. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து உள்ளூர்வாசிகள் காயங்களுடன் கிடந்த ஓட்டுநரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஓட்டுநர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் இறந்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விதல்வேலு என்பது தெரியவந்தது. விபத்து நடந்தபோது பேருந்தில் 53 பயணிகள் இருந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், சிறப்பு ஏற்பாடுகள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.