தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடத்திச் செல்லப்பட்ட தொழில் அதிபர் காவல் நிலையத்தில் தஞ்சம்! - ABDUCTED BUSINESS MAN

சேலம்: பணத்திற்காக கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபர் திடீரென காவல் நிலையம் வந்து தஞ்சம் அடைந்ததையடுத்து, அவரிடம் கடத்தல் குறித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடத்திசெல்லப்பட்ட சுரேஷ்

By

Published : Jun 20, 2019, 8:49 AM IST

ஆத்தூர் அருகே பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). தொழிலதிபரான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து பணி நிமித்தமாக வெளியில் சென்ற பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட காவல் துறைக்கு, புதன்கிழமையன்று சுரேஷின் வாகனம் சேலம் அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

கடத்திச் செல்லப்பட்ட சுரேஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்து காட்சி

வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை இது குறித்து துப்பு துலக்க ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜு, வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 19) இரவு 9 மணியளவில் சுரேஷ், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையம் வந்து தஞ்சமடைந்தார்.

இது குறித்து காவல் துறையினரிடம் சுரேஷ், பணத்திற்காகத் தன்னை சிலர் கடத்திச் சென்றதாகவும், காவல்துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் தன்னை சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் சேலத்தில் உள்ளதாகத் தனது மனைவிக்குத் தெரிவித்துவிட்டு பேருந்து மூலம் காவல் நிலையம் வந்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கடத்தல்காரர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details