சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியில் இந்தியன் வங்கி உள்ளது. இதன் அருகிலேயே ஏடிஎம் மையமும் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 12) இரவு 11 மணியளவில் இளைஞர் ஒருவர் கடப்பாரையுடன் வந்தார். பின்னர் பூட்டியிருந்த ஏடிஎம் மையத்தின் பூட்டை, உள்ளே புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்தார்.
சேலத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது! - ஏடிஎம் கொள்ளை
சேலம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது, எழுந்த சத்தத்தைக் கேட்ட அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, ஏடிஎம் மையத்தின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு, பின்னர் கருப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையிலான காவலர்கள் திருட முயற்சித்த இளைஞரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெயர் கார்மேகம் ( 30) என்பதும், வெள்ளாளபட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்த கார்மேகம் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்கு வந்து கொள்ளை அடிக்க முயற்சித்ததை ஒப்புக் கொண்டார். மேலும், இதற்கு முன்னதாக நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவங்களுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்று கருப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.