ராமநாதபுரம் மாவட்டத்தில், ரெளடி எடிசன் என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான கோபிநாத் (28) என்பவர் கடந்த மாதம் 24ஆம் தேதி சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்து போட்டுவிட்டு திரும்பும்போது, சூரமங்கலம் காவல்நிலையம் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ்குமார், விக்னேஷ், அருள்மணி, அந்தோணி ஆகிய 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்று (டிச. 30) சேலம் மாநகர காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
சேலத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம்: சேலத்தில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேர் உள்பட 6 பேர் குண்டர் தடுப்புக் காவலில் கைதுசெய்து மாநகர காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
arrested
அதேபோல் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்த லால்குடியைச் சேர்ந்த கலைப்புலி ராஜா என்பவரும், இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகும் ஸ்டாலின்