சேலம் மாவட்டம் முழுவதும் முறையாக அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து, சேலம் கோட்டாட்சியர் மாறன் தலைமையில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இணைந்து நேற்று முதல் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துவருகிறார்கள்.
இரண்டாவது நாளாக இன்று காலை சேலம் மாநகராட்சிப் பகுதியிலுள்ள குரங்குச்சாவடி பகுதியில் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அங்கு சுத்திகரிப்பு நிறுவனம் உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.