தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு..! - கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம்: கிணற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் காட்டூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு!

By

Published : Jun 27, 2019, 8:52 AM IST

Updated : Jun 27, 2019, 10:39 AM IST

சேலம் மாவட்டம், நரசோதி பட்டியைச் சேர்ந்தவர் கோபி(22). இவர் அழகாபுரம் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனப் பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார். நேற்றுமாலை கோபி காட்டூர் பகுதியில் உள்ள கிணற்றில் தனது மூன்று நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக ் கொண்டிருந்த போது அவர் எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கினார்.

குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு!

இதனைப்பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்களுடன் வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேர தேடுதலுக்கு பிறகு கோபியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 27, 2019, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details