தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரேநாளில்142 பேர் கைது - சேலம் காவல் துறை அதிரடி - Salem police

சேலம்: பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்ட143 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர் ‌.

ஒரே நாளில்142 பேர் கைது - சேலம் போலீசார் அதிரடி
ஒரே நாளில்142 பேர் கைது - சேலம் போலீசார் அதிரடி

By

Published : Dec 6, 2020, 7:03 PM IST

Updated : Dec 6, 2020, 7:35 PM IST

சேலம் மாநகரப் பகுதிகளில் பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும், குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பவர்களை அடையாளம் கண்டு அவ்வப்போது கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இன்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் நான்கு போக்கிரிகள் உள்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் சேலத்தைச் சேர்ந்த கார்த்தி, செவ்வாய்ப்பேட்டை மகேந்திரன், பிரபு, ஜெகநாதன் தாதகாப்பட்டியைச் சேர்ந்த டெனிபா, ஜெகன் சூரமங்கலம் தட்சணாமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும் இன்று மட்டும் நான்கு தலைமறைவு குற்றவாளிகள், 10 பிடியாணை குற்றவாளிகள், 24 குட்கா விற்பனையாளர்கள் உள்பட மொத்தம் 143 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் ஏதேனும் அச்சுறுத்தல் ஏ‌ற்ப‌ட்டா‌ல் நேரில் அல்லது தொலைபேசி வாயிலாகப் புகார் வழங்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Last Updated : Dec 6, 2020, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details