தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுராந்தகம் அருகே சாலையோரப் பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு! - Youngster died in accident near madurantakam

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

died
died

By

Published : Dec 2, 2020, 10:41 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்தவர் அன்பரசு (22). இவர் தனது சொந்த வேலையாக, இருசக்கர வாகனத்தில் தண்டலம் அருகே இன்று (டிச. 02) அதிகாலை சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.

விடியற்காலை நேரம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்ற அன்பரசு, நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில், தேங்கியிருந்த நீரில் அன்பரசு விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details