மதுரை:சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச்சேர்ந்த 120-க்கும மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பண மோசடி செய்த வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
காசி, பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு, கந்துவட்டி வழக்கு எனப் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் காசியின் செல்போன் மற்றும் மடிக்கணினியில் இருந்த ஆபாசப் படங்கள் அழிக்கப்பட்டிருந்ததால் சைபர் க்ரைம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆபாசப் படங்களை அழித்ததாக தெரியவந்தது.