மதுரை:மதுரை ஐராவத நல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி. பள்ளியில் பயில்கிறார். ஜல்லிக்கட்டுத் தடைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டம்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளின் மீது இவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டாலும், மிக மிக பின்னால்தான் தனக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டதாக யோகதர்ஷினிகுறிப்பிடுகிறார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், தனது காளைகளை அவிழ்ப்பதைப் பெருமையாகக் கருதுகிறார். கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையைக் களமிறக்கியபோது, தனக்கு விழாக் குழுவினர் வழங்க அழைத்தபோது, அதனைப் பெற மறுத்து காளையோடு நடையைக் கட்டினார்.
மைக்கில் கத்தினாலும் 'கெத்து கெத்துதான்'
அப்போதைய வருவாய்த் துறை அமைச்சராக ஆர்.பி. உதயகுமார், மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வழங்குவதற்காக அழைத்தபோதும் அதனை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. அதேபோன்று, இந்தமுறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையைக் களமிறக்கினார்.