தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2019, 11:18 PM IST

ETV Bharat / city

'ஆசை, ஆசையாய் வாங்கும் திண்பண்டங்களில் குவிந்துள்ள ஆபத்துகள்'

மதுரை: மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆசையாய் வாங்கும் திண்பண்டங்களில் குவிந்துள்ள ஆபத்துகள்

மதுரை முனிசாலை பகுதியில் உள்ள கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்புதடைசெய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை அனுமதியின்றி பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்ட போது, காலாவதியான திண்பண்டங்கள், பொருட்களை அங்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பேட்டி

இதனையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை உணவுத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியை சுற்றியுள்ள கடைகளில் நடத்திய ஆய்வில், 200-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், "மக்கள் பலர் எவ்வித முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் இன்றி தங்களின் குழந்தைக்கு காலாவதியான உணவு பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் அக்குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள், உடல் நல சீர்கேடுகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் முன்பு குழந்தைகள் வாங்கி உண்ணும் தரமற்ற உணவுகள் குறித்தும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், மேல்தட்டு மக்கள் வாங்கும் கடைகள், கீழ்தட்டு மக்கள் வாங்கும் கடைகள் என்று பிரித்து சோதனை நடத்தியதாகவும் இருகடைகளிலுமே காலவாதியான பொருட்கள் விற்கப்படுவதாகவும் இது குறித்து உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

100 களங்களைப் பார்த்த ஜல்லிக்கட்டுக் காளை மரணம்: பொதுமக்கள் இறுதிச் சடங்கு!

ABOUT THE AUTHOR

...view details