மதுரை : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரோசல்பூர் பகுதியை சேர்ந்தவர் மோனி. இவர் குற்ற வழக்கு ஒன்றில் தேனி மாவட்டம் பிசி பெட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை உடல் பரிசோதனைக்காக தேனியிலிருந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
சிறைக் கைதிகளுக்கான வார்டில் மருத்துவ பரிசோதனை செய்த பின்
கழிவறைக்கு சென்ற மோனி, வழிதெரியாமல் வேறொரு வார்டுக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார்.
இதனிடையே மோனி மாயமானதால் பதற்றம் அடைந்த காவலர்கள், சுமார் ஒரு நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் அவரை தேடியுள்ளனர்.