திருச்சியை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் திருவானைக்கோவில் கணபதி நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது எனவும், எனவே அதனை அகற்ற உத்தரவிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது தனி நபர் பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதா அல்லது தனிநபர் பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.