சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பகுதியிலுள்ள கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணி இந்திய தொல்லியல் துறை சார்பாகவும், நான்காவது கட்ட அகழாய்வுப் பணி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாகவும் நடைபெற்றது.
தற்போது ஐந்தாவது கட்ட அகழாய்வுப் பணியானது கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை விட இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியில் தொல்லியல் சின்னங்கள் அதிகமாக கிடைக்கலாம் என்று தொல்லியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.