மதுரை:உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் பொது நல மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று கருத்து கூறிய நீதிமன்றம், வண்டல் மண் அள்ளுவது குறித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'பொன்னவராயன் கோட்டையில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான புதுக்குளத்தில் வண்டல் மண் அள்ள ஊராட்சி மன்றத் தலைவர் கீதாஞ்சலி உரிமம் பெற்றுள்ளார்.
அவர், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், கூடுதலாக மண் எடுத்துள்ளார். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடங்களில் தனி பயன்பாடு, விவசாயம், மண்பாண்டம் செய்வதற்கு மட்டுமே வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு எடுக்கும் மண்ணை விற்பனை செய்யக்கூடாது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரின் செயல்பாடால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என, மனுவில் கோரியிருந்தார்.
விசாரணைக்கு உகந்ததல்ல