தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீர் நிலைகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : தண்ணீர் மனிதர் வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு தானாக முன்வந்து மதுரையில் உள்ள நீர்நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்
தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்

By

Published : Nov 7, 2021, 2:14 PM IST

மதுரை: வைகை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரை ராட்சத குழாய்கள் அமைத்து பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணைக்குக் கொண்டு வந்து நிரந்தரமாகத் தண்ணீர் தேக்கிவைக்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், சாத்தையாறு அணை விவசாயிகளைச் சந்தித்ததுடன் அணையைப் பார்வையிடுவதற்காக இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் வருகை தந்தார். அவர் பாலமேடு சுற்றியுள்ள விவசாயிகளைச் சந்தித்து கலந்தாலோசனை செய்தார்.

அரசுகளுக்குப் பரிந்துரைப்பேன்

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"நீர் வழித்தடங்கள் தனியார் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாத்தையாறு அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு தொடர்வதால் நீரைத் தேக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால் தமிழ்நாடு அரசு முன் வந்து நீர் நிலைகளைக் காத்து தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையிலுள்ள ஒரே ஒரு அணையான இந்த சாத்தையாறு அணையைச் சீர்செய்யவும், நிரந்தரமாகத் தண்ணீர் தேக்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்ய ஏற்பாடு செய்வேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட்: களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details