தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் வழங்க உத்தரவு - வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் வழங்க உத்தரவு

மதுரை: தேர்தல் ஆணையத்திற்கு, வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை
மதுரை உயர்நீதிமன்ற கிளை

By

Published : Dec 31, 2019, 10:48 AM IST

விருதுநதகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கௌரி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேலுமணி, தாரணி அமர்வு முன்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கையை முழுவதுமாக காணொலியாக பதிவு செய்யக்கோரி முறையிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், "குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது. மேலும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய இயலாது? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "தேர்தல் ஆணையம் தரப்பில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மற்றும் அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை

அதைத் தொடர்ந்து நீதிபதிகள்,"வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்" எனக்கூறி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள சிசிடிவி பதிவின் ஒரு நகலை, வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

கோயில் காவலர்களின் ஊதியம் தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details