தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி பொறுப்பேற்பு - collector

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி இன்று பொறுப்பேற்றார்.

ஜெ.மேகநாதரெட்டி பொறுப்பேற்பு
ஜெ.மேகநாதரெட்டி பொறுப்பேற்பு

By

Published : Jun 17, 2021, 12:04 PM IST

விருதுநகர் : தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆடசியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் கண்ணன் மாற்றம் செய்யபட்டு புதிய ஆட்சியராக சென்னை மாநகர துணை ஆணையராக பணியாற்றி வந்த ஜெ. மேகநாதரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட 23 வது ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பணிகளை தொடங்கினார்.


2013-ல் இந்திய அரசின் குடிமைப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்டம், மேட்டூரில் டிசம்பர் - 2015 முதல் பிப்ரவரி - 2018-ம் ஆண்டு வரை சார் ஆட்சியராக பணியாற்றினார். பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் - 2018-ம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையராகவும், செப்டம்பர் - 2018 முதல் மார்ச் - 2020-ம் ஆண்டு வரை வணிகவரித்துறை இணை ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மார்ச் - 2020 முதல் மே - 2021-ம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராகவும், செப்டம்பர் - 2020 முதல் மே - 2021-ம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநாகராட்சி(பணிகள்) துணை ஆணையராகவும் மேகநாதரெட்டி பணியாற்றியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details