தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் காவலர்களுக்கு கொலை மிரட்டல் - வைரலாகும் அரிவாள்மனை வீடியோ! - மதுரை குற்றச்செய்திகள்

மதுரையில் ஒரு நபர், விசாரணைக்குச் சென்ற பெண் காவலர்களை அரிவாள்மனையை கையில் வைத்து கொலை மிரட்டல் விடுக்கும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Madurai men threatening to women police, மதுரையில் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்
வைரல் வீடியோ

By

Published : Dec 19, 2021, 2:11 PM IST

மதுரை: செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது.

இதன் காரணமாக மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெருமாளின் மனைவி புகார் அளித்ததன் பேரில் பெண் காவலர்கள் சங்கீதா, பொன்னுத்தாயி ஆகிய இருவரும் பெருமாள் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அவர் வீட்டிலிருந்த அரிவாள்மனையைக் கொண்டு விசாரணைக்கு சென்ற பெண் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமன்றி அவதூறாகவும் பேசியுள்ளார்.

வைரல் வீடியோ

இதுகுறித்து, பெண் காவலர் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை செல்லூர் காவல்துறையினர் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெருமாள், அந்த இரு பெண் காவலர்களை மிரட்டும் காணொலி சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்: மீண்டும் லாக்டவுண்!

ABOUT THE AUTHOR

...view details