மதுரை:தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடத் திட்டமிடப்பட்டு இயக்க நிர்வாகிகள் களப்பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டுகளில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்களுடன் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நடத்தினர்.
தேர்தலில் வெற்றிபெற கிடா வெட்டி விருந்துவைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என மதுரையின் புகழ்பெற்ற பாண்டி கோயிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளக்கும், ரசிகர்களுக்கும் விருந்து ஜோராக நடைபெற்றது. பின்னர், செயற்குழுக் கூட்டத்தில் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உறுதுணையாக நின்று களப்பணி ஆற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:'அதர்வா - தி ஆரிஜின்' - சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுத்த எம்.எஸ்.தோனி!