மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது மண்டல அலுவலகம் மதுரை ரயில்நிலையம் அருகே செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் நிர்வாக அலுவலராகவும் பொறுப்பு உதவி ஆணையராகவும் பணியாற்றிவரும் மணி என்பவர் வரி விதிப்பு உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று (நவ. 19) இரவு அதிரடியாக அவருடைய அலுவலகத்தில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான 10 அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனை விடிய விடிய நடைபெற்றது.
மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நள்ளிரவு முதல் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூபாய் 25 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
இச்சோதனையில் கணக்கில் வராத சுமார் 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.