மதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவரின் மகன் கபில்நாத், உக்ரைன் நாட்டின் கீவ் பகுதியிலும் சௌந்தரபாண்டியன் என்பவரின் மகன் தீபன் சக்கரவர்த்தி உஸ்குரோத் பகுதிகளும் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களைப் போன்றே உசிலம்பட்டியைச் சேர்ந்த மேலும், பலர் அங்கே மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர். தங்களது பிள்ளைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்டு பத்திரமாக தமிழ்நாடு கொண்டுவர வேண்டுமென இருவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.