மதுரை:ஒன்றிய அரசு, 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (Kishore Vaigyanik Protsahan Yojana) கல்வி உதவித் தொகை' தகுதித் தேர்வுக்கான கேள்வித்தாள்களை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் வழங்குவதாக கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பில் கேள்வித் தாள்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் எனத் திட்ட தகவல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (செப்.1) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கடந்த 2021ஆம் ஆண்டு 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (Kishore Vaigyanik Protsahan Yojana) கல்வி உதவித் தொகை'க்கான தகுதித் தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன்.
அப்பிரச்னையில் ஒன்றிய அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் “அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்படும்” என உறுதி அளித்தது. இப்போது அந்த திட்டமே "இன்ஸ்பையர் சி" (Inspire She) என்ற திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.
"செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்" (PM Young Achievers Scholorship Award Scheme for Vibrant India) பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு 11.09.2022 அன்று நடைபெறவுள்ளது.