மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுக் கருத்தரங்கம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் உலகில் உள்ள 10 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.
மதுரை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மனிதவள வல்லுநர்களின் கருத்தரங்கம் குறித்து துணைத் தலைவர் கணேச நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் தென்தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி மாபெரும் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கான மனித வள திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
அக்கருத்தரங்குக் கூட்டத்தில் தேசிய அளவில் உள்ள மனிதவள வல்லுநர்கள் கலந்து கொண்டு, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த திறன் மேம்பாட்டு மாநாட்டின் வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறான வேலை வாய்ப்பினை உருவாக்குவது, அதற்குப் பொருத்தமான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துகள் அமையப் பெறும். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.