தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நாங்குநேரியில் காங்கிரஸ் 16000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்' - வசந்தகுமாரின் கணக்கு - vasantha kumar calculated nanguneri byelection

மதுரை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

எம்.பி வசந்த குமாரன்

By

Published : Oct 24, 2019, 6:18 AM IST

மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

மதுரையில் எம்.பி வசந்தகுமாரன் பேட்டி

"நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து மட்டுமே தெரியும். மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவு பற்றி தெரியாது" என்றார்.

மேலும், "பிகில் படத்தின் காலை காட்சியை ரத்து செய்திருப்பது நியாயமற்றது என்றும் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

5 ஆண்டுகளில் ரூ.132 கோடி உயர்ந்த வசந்த குமாரின் சொத்து மதிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details