மதுரை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல சாதனைகளை புரிந்துள்ளார். சட்டம் - ஒழுங்கில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவரை முதலமைச்சர் நேரில் சந்தித்து முதலீடுகளை ஈர்த்தார்.
நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். முதலமைச்சரின் பயணத்தால் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதலீடு செய்யலாம் என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. வணிகம், சுற்றுலா, விவசாயம் என அனைத்து தரப்பு முதலீடுகள் குறித்து பார்வையிட்டோம்.