தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏப்ரல் 1 முதல் மதுரை கோட்டத்தில் இரு சிறப்பு ரயில்கள் - ஏப்ரல் 1 முதல் மதுரை கோட்டத்தில் இரு சிறப்பு ரயில்கள்

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மதுரை கோட்டத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் மதுரை கோட்டத்தில் இரு சிறப்பு ரயில்கள்
ஏப்ரல் 1 முதல் மதுரை கோட்டத்தில் இரு சிறப்பு ரயில்கள்

By

Published : Mar 20, 2022, 1:38 PM IST

பயணிகளின் வசதிக்காக மதுரை - செங்கோட்டை மற்றும் மானாமதுரை - திருச்சி பிரிவுகளில் கூடுதலாக ரயில் சேவை ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி செங்கோட்டை - மதுரை விரைவு சிறப்பு ரயில் (06662) செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் மதுரை - செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் (06665) மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட்டு இரவு 09.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இந்த ரயில்கள் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோயில் சந்தை, சங்கரன்கோயில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 13 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பொது பெட்டிகள் மற்றும் 2 காப்பாளர் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். திருச்சி - மானாமதுரை விரைவு சிறப்பு ரயில் (06829) திருச்சியிலிருந்து காலை 09.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மானாமதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் மானாமதுரை - திருச்சி விரைவு சிறப்பு ரயில் (06830) மானாமதுரையிலிருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

இந்த ரயில்கள் குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 8 "டெமு" (DEMU - Diesel Electrical Multiple Units) பெட்டிகள் இணைக்கப்படும்.

இதையும் படிங்க:நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: குழப்பத்திற்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details