மதுரை: ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவாநகர் சந்திப்பில் கடந்த 10ஆம் தேதி பிற்பகல் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 75 வயது முதியவர் சுப்புராம் மற்றும் அசோகன் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் சரக்கு வாகன ஓட்டுநர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விபத்து நடைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.