தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் வன்புணர்வு - இருவர் கைது - Crime news

17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Aug 5, 2021, 6:17 AM IST

மதுரை அண்ணாநகரை சேர்ந்த 17 வயது சிறுமி, சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருடன் 2019ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் நட்பாகியுள்ளார். காலப்போக்கில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில் இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். சிறுமியோடு தனிமையில் இருந்ததை சந்தோஷ்குமார் வீடியோ எடுத்துக்கொண்டதோடு, அதனை வைத்து சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும், தனது நண்பர் ராகுல் மூலம் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிடுவதாக கூறி சுமார் ரூ.50,000வரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாய் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த சந்தோஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த ராகுல் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து இருவர் மீதும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, சிறுமியை மிரட்டியது, பணம் பறித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details